2- பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் கொடூரம். 20.04.2009 -

20.04.2009 செய்தி - காட்சி - 001 (பகல் 12 மணி வரை)

சிங்களப் படைகள் பாதுகாப்பு வலயம் மீது கடந்த பின்னிரவு முதல் தொடராக மேற்கொண்டு வருகின்ற தாக்குதல்களில் சிறார்கள் பெருமளவில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்ற அதேவேனை சிறார்கள் அனாதரவாக கைவிடப்பட்டுள்ளமை போன்ற அவல நிலைகளும் ஏற்பட்டுள்ளன.

தாக்குதல்களில் தாய் தந்தையர் மற்றும் சுற்றத்தை இழந்த நிலையில் சிறார்கள் மருத்துவமனை வளாகங்களிலும் சம்பவம் இடம் பெறும் பகுதிகளிலும் அனாதரவாக விடப்பட்டுள்ளனர்.

சிங்களப் படைகளின் மக்கள் மீதான தாக்குதல்களில் காயமடையும் மக்களுக்கு போதிய மருந்துவசதிகள் இன்மையால் பெரிய அளவிலான உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன.

பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதான தொடர் தாக்குதல்களால் புதுமாத்தளன் பகுதியில் அமைந்துள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற முடியாத அளவிற்கு சிங்களப் படைகளால் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று பின்னிரவு முதல் நடைபெற்ற இந்தத் தாக்குதல்களால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தும் மீண்டும் காயமடைந்தும் அவலத்தினைச் சந்தித்த அதேவேளை நோயாளர்களைப் பராமரிக்க நின்றிருந்த உறவினர்களும் காயமடைந்தும் கொல்லப்படும் இருந்தனர்.

இதேவேளை அந்த மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ...

தற்காலிகமாக செயற்பட்டுவருகின்ற முல்லைத்தீவு பொது மருத்துவ மனைக்கு நோயாளர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

இந்த மருத்துவமனையில் அனுபவம் பெற்ற பெருமளவான மருத்துவர்களோ தாதியர்களோ இல்லை என்பதுடன் போதிய மருந்துப் பொருட்களும் இல்லை. நோயாளர்கள் வெறும் தரையிலேயே படுக்கவைக்கப்பட்டுள்ளனர்.

காயத்திற்குப் பயன்படுத்தப்படும் கட்டுத் துணி சிறிதளவும் இல்லாத நிலையில் வேட்டி மற்றும் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தும் கொடெக்ஸ் போன்றவற்றை கட்டும் துணியாகப் பயன்படுத்துவதைக் காணமுடிகின்றது.......

மேலும்...

Latest Videos