கடற்கரும்புலிகள் -19.04.1995
19.04.1995
அன்று திருகோணமலைத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்கரும்புலித்தாக்குதல்
தென்தமிழீழ கடல் விநியோக நடவடிக்கை மற்றும் அதன் பாதுகாப்புக்காக தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப .கடற்புலிகளால் உருவாக்கப்பட்ட படையணியான வசந்தன் படையணியைச் சேர்ந்த போராளிகளால் 1995ம் ஆண்டு முற்பகுதியில் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்குள் கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் ஊடுருவிச் சென்று தாக்குதல்கள் நடாத்தியதைப்போல நாங்களும் திருகோணமலைத்துறைமுகத்திற்க்குள் ஊடுருவிச்சென்று தாக்குதல் நடாத்தலாமா என சிறப்புத் தளபதி சூசை அவர்களிடம் கேட்டார்கள்.
சூசை அவர்கள் அண்ணையிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறினார்.
அன்றையதினம் மாலை தலைவர் அவர்களைச் சந்தித்தபோராளிகள் நாங்கள் தென்தமிழீழத்திற்க்குப் விநியோக நடவடிக்கைக்குச் சென்றுவருகிற வழிகளில் இத்துறைமுகக் கடற்படையினரின் தொந்தரவுகளையும் கூறினார்கள்.
இவை அனைத்தையும் ஆர்வமாகக் கேட்ட தலைவர் அவர்கள் எந்தப் பலத்திலும் ஒருபலவீனம் இருக்கும் அதைக் கண்டுபிடித்து அதற்குள் ஊடுருவலாம் போன்ற பல்வேறு ஆலோசனைகளையும் கூறி
உங்களுக்கு என்னதேவையோ கேளுங்கள் நான் செய்கிறேன்.
எனக்கூறி போராளிகளை அனுப்பிவைத்தார்.ஒரு தாக்குதல் நடாத்த வேண்டுமென்றால் அதற்க்கு வேவு முக்கியம் அந்த வேவு நடவடிக்கைக்கு மேஐர் ராஜ்மோகன் தலைமையிலானா அணிகள் தெரிவு செய்யப்பட்டன. இவ் அணிகளை செம்மலையிலிருந்து திருகோணமலைத்துறைமுகத்திற்க்கு அண்மையாக கூட்டிச் செல்வதற்காக லெப் கேணல் திருவடி தலைமையிலான அணிகளும் தெரிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகளும் நடைபெற்றன.அதேசமயம் தென்தமிழீழத்திற்கான விநியேகமும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
1995ம் ஆண்டு இலங்கையின் சந்திரிகா அரசுடன் போர்நிறுத்தம் அமுலிலிருந்த சமயம் லெப்.கேணல் திருவடி தலைமையிலான படகு தென்தமிழீழத்திலிருந்து புதிய போராளிகளை வன்னிக்கு அழைத்து்க் கொண்டுவரும்பொழுது திருகோணமலைத துறைமுகப் பாதுகாப்புக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்து படகையும் பறித்தெடுத்தது .அதுவும் ஒரு சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை
மற்றும் புதியபோராளிகளை வன்னிக்கு பயிற்சிக்காக அழைத்துக் கொண்டுவரும்வேளை இச்சம்பவம் நடைபெற்றது .
கடற்படையின் இக்காட்டுமிராண்டித்தனமான செயற்பாடானது கடற்புலிகளை ஒரு பாரிய இக்கட்டில் தள்ளிவிட்டது.அதாவது இக்கடற்படைக்கு அவனது கோட்டைக்குள்ளே வைத்து தாக்குதல் நாடாத்தி பழிதீர்ப்பது.இதற்கான வேவுத்தரவுகள் விரைவாகச் சேகரிக்கப்பட்டு போராளிகள் தளபதிகளால் ஆராயப்பட்டு தலைவர் அவர்களிடம் திட்டம் கொடுக்கப்பட்டது.
இவைகளை தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் தளபதி கங்கைஅமரன் அவர்களின் நேரடிப்பயிற்சியிலிருந்த சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவும் அங்கயற்கன்னி நீரடிநீச்சல்பிரிவிடமும் இத்தாக்குதல் திட்டத்தைக் கொடுத்து அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி இத்தாக்குதல் திட்டத்திற்கான பயிற்சிகளையும் அடிக்கடி வந்து பார்வையிட்டதுடன் சகல ஆலோசனைகளையும் வழங்கினார்.( இப்பயிற்சித்திட்டத்தினை தலைவர் அவர்கள் பார்வையிட்ட படமும் இணைக்கப்பட்டிருக்கிறது.)
இத்தாக்குதலுக்காக தெரிவுசெய்யப்பட்ட கடற்கரும்புலிகளான மேஐர் கதிரவன். மேஐர் .தணிகைமாறன்.மேஐர்.மதுசா
மற்றும் கப்டன் சாந்தா .ஆகியோருக்கு கடுமையான பயிற்சிகள் நடைபெற்றன.
பயிற்சிகள் இரகசிய காரணங்களுக்காக வடமராட்சிக்கிழக்கு மற்றும் வன்னிப்பகுதிகளில் இடம்பெற்றன.பயிற்சிகள் நடைபெற்ற அதேவேளை இக்கடற்கரும்புலிகளும் தாக்குதல் நடாத்தும் இலக்குக்களையும் வேவு அணிகளுடன் சென்று பார்வையிட்டும் வந்தனர்.
பார்வையிட்டு வந்த கடற்கரும்புலிகள் இரண்டு தரையிறங்குகலங்கள் முன்னுக்கும் அதற்கடுத்து சிறிது தூரத்தில் இரண்டு ஆழ்கடல் ரோந்துக்கப்பல்களான ரணசுறு, சூரயா தரித்து நின்றன .இந்த ரணசுறு ,சூரயாதான் முதலாம் இரண்டாம் கட்ட ஈழப்போர்களில் கரையோரக் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடாத்தி பாரிய சேதங்களைஏற்படுத்தியது. ஆகவே இவ் ரணசுறு ,சூரயாவைத்தான் தாக்கி அழிக்கவேண்டுமெனக் தலைவர் அவர்களிடம் கடற்கரும்புலிகள் தெரிவித்தனர்.தலைவர் அவர்களும் அதற்க்கு அனுமதியளித்தார்.
ஆகபயிற்சிகள் நிறைவடைந்ததும் தாக்குதல் திட்டம் சிறப்புத்தளபதி சூசை மற்றும் தளபதி கங்கைஅமரன் அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது.தாக்குதல் திட்டமானது இலங்கைக்கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக்கலங்களான ரணசுறு, சூரயா மீது கடற்கரும்புலிகள் நீருக்கடியால் நீந்திச் சென்று தாக்கியழிப்பதாகும்.
அதற்கமைவாக லெப்.கேணல்.எழிற்கண்ணன்.மற்றும் லெப்.கேணல் நிறோஐன் தலைமையிலான அணிகள் கடற்கரும்புலிகளையும் அவர்களுக்கான பொருட்களையும் வன்னியிலிருந்து திருகோணமலை கொக்கட்டி முகத்துவாரம் என்னுமிடத்தில் தரையிறக்கிவிட்டார்கள்.
பின்பு 18.04.1995 அன்றிரவு லெப்.கேணல்.திருவடி மேஐர்.ராஜ்மோகன்.கடற்கரும்புலி மேஐர் சிவசுந்தர் தலைமையிலான அணிகள் கடற்கரும்புலிகளை தாக்குதல் நடாத்தவேண்டிய இடத்திற்க்கு அண்மையில் இறக்கிவிட்டார்கள்.
19.04.1995 அன்று அதிகாலை கடற்கரும்புலிகள் நீருக்கடியால் நீந்திச்சென்று முன்னுக்கு நின்ற இரண்டு தரையிறங்குக்கலங்களையும் தவிர்த்துவிட்டு அவைகளைத் தாண்டி நின்ற இரண்டு ஆழ்கடல்ரோந்துக்கலங்களான ரணசூறு, சூரயா மீது தாங்கள் கொண்டுசென்ற வெடிமருந்துகளுடன் வெடித்து இருகடற்கலங்களையும் அழித்து திருகோணமலைத்துறைமுகத்திற்குள்
காவியமானார்கள்.
இதுவே தென்தமிழீழத்தில் கடற்கரும்புலிகள் மேற்கொண்டமுதலாவது தாக்குதலாகும்.உண்மையில் எந்தப் பலத்திலும் ஒருபலவீனம் இருக்கும் என்ற தலைவர் அவர்களின் சொல்லுக்கும் செயல்வடிவம் கொடுத்தார்கள்.
இவ் வெற்றிகர நடவடிக்கைளை ஒருங்கினைத்து கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்களும்
அப்போதைய கடற்புலிகளின் தளபதி லெப்.கேணல் .கங்கைஅமரன் அவர்களும்.வழிநடாத்தியிருந்தனர்.
இவ்வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளான…
மேஐர் .கதிரவன்.
மேஐர்.தணிகைமாறன்.
மேஐர்.மதுசா.
கப்டன்.சாந்தா.
ஆகியோர் திருகோணமலைத்துறைமுகத்திற்க்குள் ஒரு புதிய வரலாற்றை எழுதிச் சென்றனர்.
அன்றைய இக்ககளத்தில் பெரும்பங்காற்றி வீரர்களின் துணையுடன்..
எழுத்துருவாக்கம்..சு.குணா.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Leave A Comment