உகண கப்பல் மீதான அதிரடி கடற்கரும்புலி தாக்குதல் 26.06.2000
உகண கப்பல் மீதான அதிரடி கடற்கரும்புலி தாக்குதல்
26.06.2000
26.06.2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கான
ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் சென்ற ‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடிக்கப்பட்ட
கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட..
கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார்
கடற்கரும்புலி மேஜர் சூரன்
கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன்
கடற்கரும்புலி மேஜர் சந்தனா
கடற்கரும்புலி கப்டன் பாமினி
கடற்கரும்புலி கப்டன் இளமதி
ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள் விபரம்
ஆழ்கடலில் களமமைத்து சிங்கள கடற்படைக்கலத்தை மூழ்கடித்து கடலில் காவியமான கடற்கரும்புலிகள்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள்.
சிங்களக்கடற்படை வந்துவிடடால் வீரத்துடன் சமர்செய்தபடியே, கரையேபொருட்களை பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச்சேர்ப்பர். சிலவேளைகளில் காலநிலைசீரின்மையால் கடுங்கொந்தளிப்பான அலைகளின்மத்தியிலும், சுழன்றடிக்கும் காற்றின் போதும், விவேகத்துடன் அதனை எதிர் கொள்வார்கள்.
கடற்புலிகள் அடையும் துன்பத்தினை வெறும் வார்த்தைகளில் எழுதிவிடமுடியாது.எவ்வித துன்பத்தையும் தமிழீழ விடியலுக்காக சாதாரணமாக ஏற்றுக்கொண்டு, சத்தியவேள்வியில் வித்தாகிய மாவீரர்கள் கடலில் மறைந்தாலும்,
மக்கள் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்கள். 26.06.2000 அன்று கடற்படையின் பாரிய கடற்கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்ற உகண கப்பல் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் .
சர்வதேச விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கப்பல் மற்றும் படகு சந்தித்து பொருட்கள் மாற்றுமிடத்திற்கு (முல்லைத்தீவிலிருந்து கிட்டத்தட்ட எழுபத்தைந்து கடல்மைல் உயர)அண்ணளவான தூரத்தால் கடற்புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியும் கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விநியோக நடவடிக்கையில் கடற்படையின் பாரிய கப்பல்களான சக்தி, லங்காமுடித்த, உகண கப்பல்களும்,
தரையிறங்குக் கலங்களும், இவைகளுக்கு உதவியாக அதிவேக டோறாப் படகுகளும், அடிக்கடி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் பத்துக் கடல்மைல் தொடக்கம் அறுபது கடல்மைல் தூரத்தைக் கண்காணிப்பதற்காக அதிவேகடோறாப் படகுகளும் அறுபது கடல்மைல்களுக்கப்பால் கண்காணிப்பதற்காக வீரயா மற்றும் ஆழ்கடல் கலங்களும், ஈடுபடுத்தப்பட்டன. கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் விநியோகத்தை இல்லாமல் செய்வதற்காக, கடற்படையினரால் வர்ணகீர கடல் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் ஆழ்கடல் விநியோகம் பாதிக்கப்பட்டது.இதனைக் கருத்திலெடுத்த தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்கு அக் கடற்படைவிநியோக அணி மீது தாக்குதல் நடாத்தி கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்யைத் தொடருமாறும், அதற்கான தாக்குதல் திட்டத்தையும் கொடுத்தது மட்டுமன்றிசில ஆலோசனைகளையும் கொடுத்தார்.
அதற்கமைவாக கடற்புலிகளின் கட்டளை அதிகாரிகளான லெப்.கேணல் ரஞ்சன். லெப்.கேணல் பழனி. மேஐர் ஆழியன் ஆகியோரின் தலைமையிலான சண்டைப்படகுகளும் இரண்டு கடற்கரும்புலிப் படகுகளும் சென்று ஆழ்கடலால் இராணுவத் தளபாடங்கள் மற்றும் படையினருக்குத் தேவையான பொருட்களுடன் வரும் கப்பலை இம்மூன்று சண்டைப்படகுகளால் தாக்கி
வழியமைத்துக் கொடுக்க கரும்புலிப்படகுகளால் தாக்கி கப்பலை மூழ்கடிப்பதாகும்.அதேநேரம் மேலதிகமாக வரும் கடற்படையினரை வழிமறித்து மறிப்புச்சமரை தொடுப்பதற்காக லெப்.கேணல் பகலவன் தலைமையிலான ஒரு தொகுதி சண்டைப் படகுகளும் இவர்களுக்கு உதவியாக கரும்புலிப்படகுகளும் நிலைகெண்டன.
இவ்வளவு கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் கடுமையான தென்மேற்க்குப் பருவக்காற்றுக்குள்ளும் இந்தத் தடைகளை உடைத்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளைத் தொடரவேண்டும் என்கிற நோக்கோடும் . 25.06.2000 அன்று மாலை ரஞ்சன் பழனி ஆழியன் ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகளும்,
கடற்கரும்புலிகளான சூரன் மற்றும் நல்லப்பன் தலைமையிலான கடற்கரும்புலிப்படகுகளும் சென்று முல்லைத்தீவுக்கு உயர அறுபது கடல்மைல் தூரத்தில் நிற்க அந்தநேரத்தில் திருகோணமலையிலிருந்து கடற்படையின் விநியோகத் தொடரணி வருவதாக இப்படகுகளுக்கு அறிவிக்க தயார்நிலையிலிருந்த படகுகள் சீரற்ற காலநிலை மற்றும் கடும் காற்றிற்க்கும் மத்தியில் ஒருவாறு கப்பலை இணங்கண்டு அக்கப்பலைப் பின்தொடர்ந்த
(26.06.2000 அன்று அதிகாலை)பழனி கப்பலின்மீது தாக்குதலைத் தொடுத்து வழியமைத்துக் கொடுக்க சூரனின் கரும்புலிப்படகு கப்பலின் மீது மோதியது இம்மோதலால் கப்பல் நிலைகுலைய கப்பலிலிருந்து செறிவான தாக்குதல் நடாத்தியவண்ணமிருக்க பழனி ரஞ்சன் மற்றும் ஆழியனது படகால் தாக்குதலை தொடுத்து வழியமைத்துக் கொடுக்க நல்லப்பனது கரும்புலிப்படகு கப்பல் மீது மோத கப்பல் வெடித்துச் சிதறி மூழ்கியது.
இவ்வெற்றிகரத் தாக்குதலில் லெப் கேணல்.ஞானக்குமார் மேஐர் .சூரன்.மேஐர். நல்லப்பன்.மேஐர். சந்தனா.கப்டன் .இளமதி.கப்டன்.பாமினி.ஆகிய கடற்கரும்புலிகள் கடலிலே காவியமானார்கள்.இவ் வெற்றிகரத் தாக்குதலுக்குப்பின் சிங்களக்கடற்படையானது ஆழ்கடலிலும், கடற்புலிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திகைத்து நின்றனர்.
இந் நிலையினை எதிரிக்கு ஏற்படுத்தி கடலின் மடியில்.நிறைந்திருக்கும் எங்கள் வீரக்கடற்கரும்புலிகள், எங்களின் நினைவிலும் நிறைந்திருப்பார்கள்.
எழுத்துருவாக்கம்….சு.குணா.
Leave A Comment