கடற்கரும்புலிகள் 21.07.1996

முல்லை கடல்சமரில் அதிரவைத்த கரும்புலித்தாக்குதல்

21.07.1996 


முல்லைத்தீவு இராணுவத் தளம் மீதான “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கை 18.07.1996 அன்று தொடங்கப்பட்டது. இராணுவத் தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட இராணுவத்தினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க கடல்வழியாக மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படை தரையிறங்கு கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.


21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் மற்றும் கடற்கரும்புலி கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது.

 

கரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரே நேரத்தில் கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது.


Leave A Comment