கடற்கரும்புலிகள் 16.09.2001
தமிழீழ கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் இரு டோறாப்படகு மூழ்கடிப்புச் சமர்
16.09.2001
யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் இரு டோறாப்படகு மூழ்கடிப்புச் சமர் பற்றிய விபரம்.
இலங்கை அரசபடைகளின் தொலைத் தொடர்பாளரை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் கடற்புலிகளின் மகளீரணியினரால் பல மாதங்களாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு தாக்குதற் திட்டம் தலைவர் அவர்களிடம் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் கொடுக்கப்பட்டது.
அத்திட்டத்தின்படி திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு படையினரை ஏற்றிச்செல்லும் கடற்படைக்கப்பலை தாக்கி அழிப்பதுமாகும்.
இதில் இன்னுமொரு பாரிய சிக்கலுமிருந்தது.
அதுஎன்னவெனில் சிலவேளைகளில் கடற்படையினர் படையினரை ஏற்றிச்செல்லும் கப்பல்களில் பொதுமக்களையும் தங்களது பாதுகாப்பிற்காக அதாவது மனிதக்கேடயமாக பயண்படுத்துவார்கள்.
இதனை முதலாவதாக முக்கியமாகாக் கவனத்தில் எடுக்கவேண்டும் .
படையினர்மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் ஒரு பொதுமகனுக்கும் எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது என்பதில் தலைவர் அவர்கள் உறுதியாகஇருப்பார்.பொதுமக்களுக்கு சேதமேற்படும் என்பதற்காக எத்தனையோ வெற்றிச்சமர்களையே நிறுத்தியவர் எங்கள் தலைவர் அவர்கள்.
அப்படியிருக்கையில் இச்சமருக்கு அனுமதிகொடுப்பாரா..
அப்படியிருந்தும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்தார்.
அதாவது கப்பல் மீது
பிரதான கட்டளைமையத்திலிருந்து அனுமதிவரும்வரை தாக்குதல் மேற்கொள்க்கூடாது.
அதற்கமைவாக மேஐர் சிவா ,லெப்.கேணல் சுடர்ணன், லெப்.கேணல் அமுதசுரபி, லெப்.கேணல் பகலவன் ,ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகள் காங்கேசன்துறையிலிருந்து வரும் கடற்படைப்படகுகளை வழிமறிப்பதற்காகவும்,
அதேசமயம் திருகோணமலையிலிருந்து வரும் கடற்படைப்படகுகளை வழிமறிப்பதற்காக லெப்.கேணல் சிறிராம் ,லெப்.கேணல் தியாகன், லெப்.கேணல்.கண்ணியத்தம்பி, மற்றும் குமுதினி ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகளும்,
அதேசமயம் கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர் தலைமையிலான லெப்.கேணல் குமுதன் .தளபதி விடுதலை, லெப் .கேணல் ஜெரோமினி, லெப்.கேணல் திருவருள்,
லெப்.கேணல் வைகுந்தன் ,மேஐர் அப்பாஸ் தலைமையிலான அணிகள் மற்றும் இவர்களுடன் கடற்கரும்புலிப்படகணிகள் இவர்கள் படையினரை ஏற்றிவரும் கப்பலை வழிமறித்து கப்பலை தாக்கி மூழ்கடிப்பார்கள் இதுவே திட்டமாகும்.
திட்டத்தின்படி 15.06.2001 அன்றிரவு 11.00 மணியளவில் படகணிகள் தத்தமக்குரிய இடங்களுக்கு நகர்ந்து 16.09.2001 அதிகாலை குடாரப்பிற்க்கு உயர 45கடல்மைல் தூரத்தில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு படையினரை ஏற்றிக் கொண்டுசென்ற கப்பலை இரும்பொறைமாஸ்ரரின் அணிகள் கப்பலுக்குப் பாதுகாப்புக்கு வந்த டோறாப்படகுகள் மீது தாக்குதல் நடாத்தி கப்பலை வழிமறித்து அக்கப்பலை கடற்கரும்புலிகளின் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்தார்கள்.
அதேசமயம் திருகோணமலையிலிருந்து கப்பலைப் பாதுகாக்க வந்தடோறாப்படகுகளை லெப்.கேணல் தியாகன் தலைமையிலான அணிகள் வழிமறித்துத்தாக்குதல் நடாத்திக்கொண்டிருந்த சமயம் கடற்கரும்புலி லெப்.கேணல் அனோஐன் தலைமையிலான கரும்புலிப்படகு ஒருடோறாப்படகை மோதி மூழ்கடித்தார்கள்.
அதேநேரம் அன்றையதினம் இரண்டுகப்பல்கள் வந்ததால் எதுபடையினரை ஏற்றிவந்தகப்பல் எது பொதுமக்களை ஏற்றிவந்த கப்பல் எனபதை இனங்காண்பது கடினமாக இருந்தது .
எனெனில் வழமையாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறைக் போகும் கப்பல்கள் தங்கள் கப்பலது பெயர் தாங்கள் எதுக்குநேர போறம் என்பதை அறிவிப்பார்கள் ஆனால் அன்றையதினம் கப்பலது பெயரைச்சொல்லாமல் அறிவித்தால் இப்பிரச்சனை ஏற்பட்டது.
தலைவர் அவர்களிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.தலைவர் அவர்கள் கப்பல்மீது தாக்குதல் நடாத்தவேண்டாமென அறிவிக்கப்பட்தால் கடற்கரும்புலிகளினதும் கடற்புலிகளது கட்டுப்பாடிலிருந்த கப்பல்கள் விடப்பட்டது.(தலைவர் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தலைவர் அவர்களிடமிருந்து பதில் வரும்வரை கப்பல்கள் பருத்தித்துறைக்கரையிலிருந்து 18 கடல்மைல் உயர கடற்புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் நின்றது.)
இரும்பொறைமாஸ்ரர் தலைமையிலான சண்டைப்படகுகள் கப்பலை மீட்கவந்த டோறாப்படகுகள் மீது தாக்குல் நடாத்த அதில் ஒருடோறாப்படகு செயலிழந்து நின்றது .
அவ்டோறாப்படகுமீது கடற்கரும்புலிப்படகு மோத கடற்கரும்புலிப்படகின் வெடிமருந்துப்பொறியமைப்பு வெடிக்கவில்லை.
இருந்தாலும் கரும்புலிப்படைகையும் அதிலுள்ளவர்களையும் லெப்.கேணல் இரும்பொறைமாஸ்ரர் தலைமையிலான படகிலுள்ளவர்கள் டோறாப்படகிற்க்கு
மிக அருகில் சென்று கடற்கரும்புலிப்படகையும் அதிலுள்ளவர்களையும் மீட்டனர்.
உண்மையில் போராளிகள் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கையில் தளபதி இரும்பொறைமாஸ்ரர் தனது படகை டோறாப்படகிற்க்கு மிக அண்மையாகச் சென்று அதுவும் டோறாப்படகுகளின் தாக்குதலுக்கும் அத்தாக்குதல்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்தியும் அவர்களை மீட்டெடுத்து தலைவர் அவர்களின் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுத்தார்.
என்று சொன்னால் அது மிகையாகாது.இதுதான் தலைவர் அவர்களின் வளர்ப்பு எனபதை பெருமையோடு கூறலாம்.
அன்று அக்கப்பலில் ஆயிரத்திஇருநூறு படையினர் இருந்தனர்.பொதுமக்களும் இருந்ததால் தலைவர் அவர்களின் கண்டிப்பான உத்தரவினால் அன்றைய படையினரின் பேரழிவு தடுக்கப்பட்டது.
இதேசமயம் மேஐர் சிவா தலைமையிலான படகுத்தொகுதியினர் மற்றுமொரு டோறாவை தங்களது கனர ஆயுதங்களால் தாக்கி மூழ்கடித்தார்கள்.
இப்படியான பல்வேறு அர்ப்பணிப்புக்கள் நிறைந்த இக்கடற்சமரில் பன்னிரன்டு கடற்புலிகளின் சண்டைப்படகுகளும்
எட்டுகடற்கரும்புலிப்படகுகளும் இருபத்திநான்கு கடற்கரும்புலிகளும் நூற்றிஎழுபது கடற்புலிகளும் பங்கேற்ற இவ்வெற்றிகரத் தாக்குதலை கடலில் கடற்புலிகளின் துணைத் தளபதி இரும்பொறை மாஸ்ரர் செவ்வனவே வழிநடாத்தியிருந்தார்.
அனைத்து கடல்நடவடிக்கைகளையும் குடாரப்பிலிருந்து சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தியிருந்தார்.
இக்கடற்சமருக்குத் தேவையான எரிபொருட்களையும் தாக்குதலுக்குத்தேவையான வெடிபொருட்களையும் இச்சமரில் பங்கேற்ற பெரும்பாலான ஆண் பெண் போராளிகள் கடும் தென்மேற்க்குப் பருவக்காற்றின் மத்தியிலும் கடற்படையின் கடும்கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும்
விமானப்படையின் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் முல்லைத்தீவுக்கு உயர நூற்றிஇருபது கடல்மைல் தூரம்சென்று அங்கு நின்ற கப்பலிலிருந்து பொருட்களைச் சிறுசிறுகச் மிகுந்த அர்பணிப்புடன் கொண்டுவந்து சேர்த்தார்கள்.
அவர்களிடம் இருந்த ஒரேநம்பிக்கை ஒரு பாரிய வெற்றித்தாக்குதலைக் கொடுப்பதேயாகும்.
அப்படிப் பெற்ற பாரிய வெற்றியை அதுவும் ஆயிரத்திஇருநூறு படையினரை ஏற்றிக் கொண்டுவந்த கப்பலை கிட்டத்தட்ட ஒருமணித்தியாலயமாக கடற்புலிகளின் சண்டைப்படகுகளின் துணையுடன் பூரண,
கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருந்த கடற்கரும்புலிகள் ஒருபொதுமக்களுக்கும் எந்தச்சேதமும் வரக்கூடாது என்ற தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக பெரும் சங்கடத்துடன் கப்பலை தொடர்ந்து பயணிக்க அனுமதித்து விட்டுதளம் திரும்பினார்கள்.
மக்களைக் மனித்கேடயமாக பாவித்து பயணித்த இலங்கை அரசபடைகளையும் பொதுமக்களுக்கு எந்தச் சேதமும் வரக்கூடாது என்பதற்காக கைக்கெட்டிய பாரியவெற்றியையும் மக்களுக்காக விட்டுவிட்டுவந்த விடுதலைப்புலிகளையும் நினைத்துப் பார்க்கின்றோம்.
இவ்வெற்றிகரத் தக்குதலில் கடற்புலிகளின் பல்வேறு வெற்றிகரத்தாக்குதல்களை கடலில் செவ்வனவே வழிநடாத்தியவரும் கடற்புலிகளின் கனரக ஆயுதப் பயிற்சி பிரதான ஆசிரியரும் கடற்புலிகளின் துணைத் தளபதியுமான
லெப்.கேணல். இரும்பொறைமாஸ்ரர்.
லெப்.கேணல்.குமுதன்.
கடற்கரும்புலி .லெப்.கேணல்.அனேஐன்
கடற்கரும்புலி.மேஐர் .அருணா.
கடற்கரும்புலி.மேஐர்.நித்தியா.
கடற்கரும்புலி.மேஐர்.காந்தி.
மேஐர்.காந்
மேஐர்.நளன்.
கப்டன்.எழிலரசன்.
ஆகியபோராளிகள் வீரச்சாவடைந்தனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Maaveerarkal
Leave A Comment