ரகுபதியின் துரோகம்...
தமிழர் விளையாட்டுப் போட்டியை குழப்ப முற்பட்ட முன்னாள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதி
விளையாட்டு விழாவில் இருந்து கடும் நிபந்தனைகளுடன் காவல்துறையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்...
10.08.2024 அன்று சுவிட்சலாந்தில்(Switzerland) ஆரம்பமான 25வது தமிழர் விளையாட்டு விழாவில் போட்டியை குழப்ப முற்பட்ட முன்னாள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதி மைதானத்தை விட்டு காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பை தன்னை மீண்டும் எடுக்கும்படி தலைவர் பிரபாகரன் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகக் கூறி, அந்தப் பொறுப்பை சில நாட்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட ரகுபதி என்பருக்கும், முன்னாள் போராளிகள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறியைத் தொடர்ந்தே, சுவிஸ் காவல்துறையினர் ரகுபதியை மைதானத்தைவிட்டு அகற்றியதாகவும், மைதானத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிட்டதாகவும் தெரியவருகின்றது.
அதேவேளை, ரகுபதி மைதானத்தை விட்டுவெளியேறாதுவிட்டால், தாம் விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளமாட்டோம் என்று சில விளையாட்டு வீரர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் மைதானத்தினுள் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
Leave A Comment