சிங்களர்களின் ஆட்சிக் காலம் தமிழர்களின் இருண்ட காலம் என்றே வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்படும் அளவுக்கு மிகவும் கொடுரமானது. இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களின் நிலப்பகுதிகள் சிங்களத்தால் பறிக்கப்பட்ட பின்னாலும் மீதமுள்ளவையே தமிழர் பகுதிகளாக நீடிக்கின்றன. தமிழர் என்ற தேசிய அடையாளத்தை முற்றிலும் துடைத்தழிக்க துடித்த சிங்களப் பேரினவாத அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று இனப்படுகொலை செய்து முடித்திருக்கிறது. காலங்கள் கடந்தாலும் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகள் நம் இரத்தத்தை உறைய வைப்பவை. நடத்தப்பட்ட படுகொலைகள் நம் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்பவை. ஈழத் தமிழர்களின் வரலாற்றை வாசிப்பவர்கள் கண்ணீரின்றி கடக்க முடியாத நிகழ்வுகளுள் ஒன்று இந்த கருப்பு யூலை எனப்படும் ஜூலை கலவரம். 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்களப் பேரினவாத அரசாலும், சிங்கள இனவெறியர்களாலும் தமிழர்களுக்கு நடத்தப்பட்ட கொடூரங்களே “கறுப்பு ஜூலை” என்று குறிப்பிடக் காரணமாக இருக்கிறது.
Leave A Comment