பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் வரையிலான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனி.


நாம்  நினைத்திருந்ததெல்லாம் இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு. காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும் – உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில்பெருமைப்படக்கூடிய அளவுக்கு காந்தியடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு. அப்படிப்பட்ட ஓரு நாட்டிடம் நீதிகேட்டு அமிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், உண்மையிலேயே பாக்கியசாலிதான்.அகிம்சை எனும் உயரிய ஒழுக்கத்தின்பால் இயங்குவதாக காட்டிக்கொண்டிருந்த இந்தியா  தனது கோரமுகத்தைக் காட்டியது, நல்லூரில். 


15.09.1987 அன்று ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தியாக தீபம் லெப் கேணல் திலீபன்   ஒரு துளி நீர் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் அந்த தியாக வேள்வியில் மெழுகாய் உருகி தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் அவர்களின்  35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும்   வட தமிழீழம் .யாழ் நல்லூரில் அமைந்துள்ள  திலீபன் அவர்களின் நினைவிடத்தில்    15-09-2022 அன்று தொடங்கியது அத்துடன்  பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் வரையிலான  திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய  ஊர்திப் பவனியும் அதே நாளில்   பொத்துவிலில் ஆரம்பமாகியது.









Leave A Comment