அளவெட்டியில் வித்தாகிய கரும்புலிகள்.29.10.1995
29.10.1995 அன்று, யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் மீது
ஊடுருவி நடத்திய கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவு.
29.10.1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் மீது ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி கப்டன் சிறைவாசன் / திலீப், கரும்புலி கப்டன் அகத்தி, கரும்புலி கப்டன் தினகரன் / ஜீவன், கரும்புலி கப்டன் ஈழவன், கரும்புலி லெப்டினன்ட் வேணுதாஸ், கரும்புலி லெப்டினன்ட் கோவிந்தன் / நளினன், கரும்புலி லெப்டினன்ட் கலைச்செல்வன், கரும்புலி லெப்டினன்ட் தொண்டன், கரும்புலி லெப்டினன்ட் ராகுலன் / தங்கத்துரை, கரும்புலி லெப்டினன்ட் சசிக்குமார், கரும்புலி 2ம் லெப்டினன்ட் இசைச்செல்வன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் அளவெட்டியில் பகுதியில் 29.10.1995 அன்று சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் மீது ஊடுருவி நடத்திய கரும்புலித் தாக்குதலில் புயலான தேசத்தின் புயல்கள்.
நகரங்களைக் கைப்பற்றிய தனது இராணுவ மேலாதிக்கத்தை உலக அரங்கில் நிலைநாட்ட எதிரி எடுத்த முயற்சிகளில் ஒன்றாகவே யாழ் நகரமும் குரிவைக்க்கப்படுகிறது.
சூரியகதிர் இராணுவ நடவடிக்கை
விடுதலைபுலிகளின் எதிர் நடவடிக்கை உக்கிரமடைந்த நாட்கள் அவை
எதிரியின் இராணுவ நடவடிக்கையைத் திசைதிருப்ப வேண்டும். திருப்புமுனையொன்றை சண்டைக்களத்தினில் ஏற்படுத்தும் திட்டம் ஒன்று தலைமைப்பீடத்தினால் வகுக்கப்படுகிறது.
களத்தின் ஒருங்க்குனைப்புத் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு அவர்கள் இத்தாக்குதல் பற்றி கூறுகையிலிருந்து
எதிரியின் முன்னேற்ற நகர்வை தாமதபடுத்துவதற்க்காக, ஓர் அணியை உள்நூழைத்து ஒரு தாக்குதாலை செய்யவேண்டி இருந்தது. எதிரியின் முன்னரங்க நிலைகளுக்கு வலுச்சேர்க்கக் கூடிய ஆட்லறி சூட்டாதரவை வழங்கக்கூடிய ஆட்லறிநிலைகள், எதிரியின் அணிகளின் நகர்வுக்கு ஆதரவாக செயற்படக்கூடிய (விநியோகங்கள்) பின்தள கட்டளைப் மையத்தை தாக்கி அழிப்பதன் மூலம் எங்களுக்கு ஓர் அதாவது கால இடைவெளியை ஏற்படுத்துவதுதான் திட்டமாக இருந்தது.
“கரும்புலிகளே வழமையாக சண்டைகளின் போக்கை திசை மாற்றுபவர்கள் இந்த நடவடிக்கைக்கும் கரும்புலி அணிகள் தயாராகின்றது”.
இழப்புக்கள் இன்றி உள்நுழைந்து விட்டதாக தகவல் வந்தது…….
அதன் பின்னர் நிலைமை மாறியது. தொடர்புகள் முற்றாக விடுபட்டுப்போயின.
இராணுவ ரோந்து அணியொன்று இவர்கள் விட்டுச் சென்ற சில தடயங்களை வைத்து, இவர்களின் நகர்வுப்பாதைகளுடாக இவர்களின் இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து சென்றது. அந்தசமயத்தில் தங்களின் தடத்தை பின்தொடர்ந்துதான் இராணுவத்தினர் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை.எனவே அந்தக் கட்டிடத் தொகுதியில் நிலையெடுத்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து நழுவுவதற்காக ஆங்காங்கே அவர்கள் பதுங்கியிருந்த வேளை, எதிரி திட்டவட்டமாக அதாவது எங்களது அணியொன்று உள்நுழைந்ததை அந்த தடயத்தை வைத்து அறிந்துகொண்டு முன்னேற்பாடாக சூர்ரிவளைப்பதர்க்குரிய வியூகத்தைக் போட்டு அவர்களின் கட்டிடம் நோக்கி முன்னகர்ந்த வேளை அங்கே ஓர் நேரடி சண்டை ஒன்றை அவர்கள் சந்திக்க நேரிட்டது. அந்த நேரடிச் சண்டையிலிருந்து ஓர் அணியால் மாத்திரமே வெளியெறக்கூடியதாக் அமைந்தைது.
எதிரி கரும்புலிகளை எவ்வாறு எதிர்கொண்டிருப்பான்….!
கரும்புலிகள் சாதித்தவை என்ன….?
தனது இழப்புகள் எவை என எதியே நன்கு அறிவான்…!
மாசியப்புட்டி சந்திக்கு முன்பாக எதிரி நகர்ந்து வந்து நிலையெடுத்திருந்தான். அவனுடைய நிலையிலிருந்து எங்களுடைய நிலை மிகவும் மிகவும் அண்மித்ததாக (100m) கொண்டதாக இருந்தது. அந்தப் பகுதிக்கு இவர்கள் ( கரும்புலிகள் ) வந்து எதிரியின் பகுதிக்குள் உள்நுழைந்து ஓர் தாக்குதலை இரவு வேளையிலே செய்தனர்.
மாசியப்புட்டி சந்திக்கு தொடர்ந்து வேகமாக முன்னேறிய இராணுவம், அன்று இரவு தொடுத்த தாக்குதல் மூலம் அந்த நகர்வு மட்டுப்படுத்தப்பட்டது. அந்தத் தாக்குதல் மூலம் கிட்டத்தட்ட நான்கு – ஐந்து நாட்கள் இடைவெளி கிடைத்தததினால் எங்கள் முன்னரங்க நிலைகளை நாங்கள் தொடர்ந்தும் பலப்படுத்தி, தொடர்ந்து முன்னேறிய இராணுவத்தின் மீது பெரும் இழப்புகள் ஏற்படுத்தி பெரும் தாக்குதலை செய்வதற்கு அந்த நாட்கள் மிகவும் எங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.
எம் வெற்றிக்கு உறுதுணையகாக கரும்புலி கப்டன் சிறைவாசன், கரும்புலி கப்டன் அகத்தி, கரும்புலி கப்டன் ஈழவன், கரும்புலி கப்டன் தினகரன், கரும்புலி லெப். வேணுதாஸ், கரும்புலி லெப். நளினன், கரும்புலி லெப். கலைச்செல்வன், கரும்புலி லெப். தொண்டன், கரும்புலி லெப். தங்கத்துரை, கரும்புலி லெப். சசிக்குமாரன், கரும்புலி 2ம் லெப். இசைச்செல்வன் ஆகிய தேசத்தின் புயல்கள் புயலாய் வீசி தமிழீழ காற்றில் கலந்தனர்.
வெளியீடு :உயிராயுதம் நூல்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
(விடுதலைக்கு வித்தான கரும்புலிகள் பக்கத்தை பார்வையிட........)
Leave A Comment