அகவணக்கம் செலுத்தும் முறை

தேசிய நிகழ்வுகளின்போது பின்பற்றவேண்டிய நிகழ்வு ஒழுங்குமுறைகள் வருமாறு:

பொதுச்சுடர்
தேசிய கொடியேற்றல்
ஈகைச்சுடர்
மலர்வணக்கம்
அகவணக்கம்
உறுதியுரை
நினைவுரை

தமிழீழத்தில் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்படும்போது முதலில் தமிழீழ தேசியகொடியே ஏற்றப்படும்.

புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில், முதலில் அந்நாட்டு தேசிய கொடியும், அதன் பின்னர் தமிழீழ தேசிய கொடியும் ஏற்றப்படவேண்டும். தேசிய கொடிகள் இறக்கப்படும்போது, முதலில் தமிழீழ தேசிய கொடியும், அதன் பின்னர் குறித்த நாட்டு தேசிய கொடியும், இறக்கப்படவேண்டும்.

தமிழீழத்தில் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவுகூரப்படும்போது, காலையில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தேசியக்கொடிகள் ஏற்றப்படுவது வழமை. மாலை நிகழ்வில் ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டும்.

அகவணக்கம் செலுத்தும் முறை 1:


தமிழீழ விடுதலைப் போரிலே
வீரச்சாவடைந்த மாவீரர்களையும்
போராட்ட காலப்பகுதியில் உயிரிழந்த
நாட்டுப்பற்றாளர்களையும்
பொதுமக்களையும்
நினைவு கூர்ந்து
அகவணக்கம் செலுத்துவோமாக!


அகவணக்கம் செலுத்தும் முறை 2:

தமிழீழ விடுதலைப் போரிலே
வீரச்சாவடைந்த மாவீரர்களையும்
சிறிலங்கா மற்றும் இந்தியப்படைகளால் கொல்லப்பட்ட
நாட்டுப்பற்றாளர்களையும்
பொதுமக்களையும்
மற்றும் தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த
தமிழக உறவுகளையும் உலகத்தமிழ் உறவுகளையும்
நினைவு கூர்ந்து
அகவணக்கம் செலுத்துவோமாக!


குறித்த மணித்துளிகளின் பின்னர் நிறைவுசெய்வோமாக! எனக்கூறி அகவணக்கத்தை நிறைவு செய்யலாம்.


அகவணக்கம் செய்யும் போது இரண்டு கருப்பொருட்களைக் கவனிக்க வேண்டும்:
1. அக வணக்கம் செய்வதற்கு (1 நிமிடம், 2 நிமிடம் என்று) நேர அவகாசம் கூறக்கூடாது.
2. முடிவில் “நன்றி” என்று கூறக்கூடாது. “நிறைவுசெய்வோமாக” என்றே கூறவேண்டும்.


அகவணக்கம் செலுத்தப்படும்போது மாவீரர்களின் தியாகங்களையும் ஈகங்களையும் நினைவுகூர்ந்து (நினைவுகளில் கொண்டுவந்து அவர்களின் குறிப்பான தியாகங்களை நினைவுகளில் நிறுத்தி) மனதில் வணக்கம் செலுத்தலாம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment