பார்வையில்

மாவீரர் வாரம் (2ம் நாள்) நவம்பர் 22

சங்கர் வீரமரணம் 27.11.1982.
அதற்கு சரியாக ஒரு மாதம் முன்னர் 27.10.1982 அன்று சாவச்சேரி காவல்நிலையம் மீதான தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு நடாத்துகின்றது.சீலன் தலைமையில்..
அந்த தாக்குதலில் ஒரு வரலாறு பதியப்படுகிறது சங்கரால்.
ஏ9 பாதை என்றழைக்கப்படும் கண்டிவீதியில் ஒரு தமிழன் முதன்முதலில் தன்னியக்க துப்பாக்கியுடன் (ஜி3- கெக்ளர் அண்ட கொச்) ஒளிபொருந்திய கண்களுடன் நின்றபடி அந்த பாதையை தனது கட்டுப்பாட்டுக்குள் அந்த நாளில் வைத்திருந்தான்.
ஏ9 பாதை என்’பது வெறுமனே ஒரு பிரதானவீதி என்பது மட்டும் அல்ல.
சிங்களதேசத்தின் நிர்வாகமையம் தமிழர்தாயகத்தை பலவந்தமாக ஆளுவதன் ஒரு அடையாளம். தமிழர்தேச இறைமையை சிங்களதேசம் ஆயுதமுனையில் அடக்கி வைத்திருப்பதன் ஒரு வெளிப்பாடு.
இந்த பாதை முழுமையாக தமிழர்களின் ஆளுகைக்குள் என்று வருகின்றதோ அன்று சிங்களபேரினவாதம் தமிழர்மீது வலிந்து பூட்டி வைத்திருக்கும் விலங்கு அறுபட ஆரம்பிக்கும். கடந்த காலங்களில் இந்த பாதையை கைப்பற்றுவதற்கு சிங்களம் செய்த ராணுவநடவடிக்கைகள் எல்லோரும் அறிந்ததே.
அத்தகைய ஒரு பிரதான பாதையை 82ம்ஆண்டு ( இன்றைக்கு 36வருசத்துக்கு முன்பு) ஒரு தமிழர் விடுதலை அமைப்பு தங்களின் கட்டுப்பாட்’டில் வைத்திருந்தது ஒரு வரலாற்று பதிவு.
அந்த நாளில் இதனை செய்தவன் சங்கர்.
என்றாவது ஒரு நாள் ஏ9 பாதை தமிழர்களின் முழு ஆளுமைக்குள் வந்தே தீரும்.
அப்போது 82 அக்டோபர் 27ம்திகதி இதே பிரதான வீதியில் அச்சம் ஏதுமற்ற ஒரு 21வயது தமிழ் இளைஞன் சிங்களதேசத்து ஆயுதப்படைகளை எதிர்பார்த்து ஆயுதம் ஏந்திபடி நின்றிருந்தான் என்ற வரலாற்றை பதியும்.
சங்கர் எதிலும் நீயே நின்றாய் முன்ணணியில்
சாவிலும் நீயே
இன்று உன் நினைவால் எழுகிறது எம் இனம்.

– ச.ச.முத்து-

Leave A Comment